கார்த்திகை திருநாள் தீபம். எப்படி தோன்றியது. கதை தெரியுமா..?
இன்று கார்த்திகை திருநாள். பலர் வீடுகளில் மற்றும் வாசல்களில் வண்ண கோலமிட்டு அழகாக தீபங்களால் அலங்காரம் செய்து வழிபடுவர். ஆனால் நாம் எதற்கு கார்த்திகை திருநாள் கொண்டாடுகிறோம். எதற்காக வீடுகளின் வாசல்களில் விளக்குகள் ஏற்றுகிறோம் என்று பலருக்கும் தெரியாது.
பிரம்மாவும் விஷ்ணுவும் யார் பெரியவர் என்று சண்டையிட்டு அடியையும், முடியையும் தேடிய கதை அனைவருக்கும் தெரிந்தது.
அன்று சிவன் ஜோதியாக உருவெடுத்தது, உலக மக்கள் காண வேண்டுமென்று பிரம்மாவும், விஷ்ணுவும் கேட்க, அதன்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று சிவன் ஜோதி வடிவில் தோன்றியதால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
இதனை உணர்த்தும் வண்ணம் தான் 2668 அடி உயர மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Very nice and true
ReplyDeletePost a Comment