Title of the document

 மருத்துவ படிப்புகளில் புதிய உள் ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு!

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி உயிர்நீத்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களில் உள்ளோருக்கு மருத்துவ படிப்பிற்கு உள்ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியா முழுவதும் முடங்கி போன சூழலில் நாடெங்கும் மக்கள் பலர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் நேர்ந்தது. 

மட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை மற்றும் துப்புறவு ஊழியர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிர்நீத்த முன்கள பணியாளர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மருத்துவம் படிக்க அவர்களுக்காக அகில இந்திய மருத்துவ படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து சிறப்பு உள்ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post