BE - துணை கலந்தாய்வு அறிவிக்கை இன்று வெளியீடு!
நமது வலைத்தளத்திற்கு கிடைத்த தகவல் படி இன்று உயர் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பொதுகலந்தாய்வு பங்கேற்காத மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு துணைக் கலந்தாய்வு கலந்துகொண்டு பதிவு செய்வதற்கு ஏதுவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணை கலந்தாய்வு அறிவிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.
சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற தகுதி வாய்ந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக் கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 52 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் துணைக் கலந்தாய்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும்.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ள துணைக் கலந்தாய்வு அறிவிக்கையைத் தொடர்ந்து, மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக நவ.3- ஆம் தேதி முதல் நவ.7- ஆம் தேதி வரை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment