Title of the document

பள்ளி திறந்து 3 நாளில் 262 மாணவர்கள் மற்றும் 160 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி  

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.. 

 ஆந்திர மாநிலத்தில் இதுவரை 262 மாணவர்கள் மற்றும் 160 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநில நிலைகளுக்கேற்ப தளர்வுகளுடன் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 4 நாள்களுக்குள் மாநிலம் முழுவதும் 262 மாணவர்கள் மற்றும் 160 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வி ஆணையர் வி.சின்னவீரபத்ருது, "அனைத்து கல்வி நிலையங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. எனினும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆபத்தானது அல்ல." எனத் தெரிவித்தார்.

"நேற்று (நவம்பர் 4) சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் வகுப்புகளில் பங்கேற்றனர். இதுவரை 262 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 0.1 சதவீதம் கூட இல்லை. அவர்கள் பள்ளிகளுக்கு வருவதால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஒவ்வொரு பள்ளி அறையிலும் 15 அல்லது 16 மாணவர்கள் மட்டுமே இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம், "என்றும் அவர் தெரிவித்தார்..

ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email  முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள்  பதிவேற்றம் செய்யப்படும் ..
 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post