12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு - சி.பி.எஸ்.சி.
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொது தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தகவல் மூலமாக வெளியாகி உள்ளது.
இதன்படி செய்முறை தேர்வு கால அட்டவணை முதலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில் குறிப்பாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்சி விரைவில் அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகும் அதன்பிறகு அறிவியல், வணிகவியல் மற்றும் கலை உள்ளிட்ட பிரிவு மாணவர்களுக்கான எழுத்து தேர்வு அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முழு அட்டவணை www.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டு நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் சி.பி.எஸ்.சி., மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டு பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment