Title of the document
துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை 11ம் வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்- பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை. 
 
இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை 11ம் வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்' என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் போது சில தலைமை ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை செப். 30ல் முடிந்து விட்டது என தெரிவித்துள்ளனர்.

இக்கல்வியாண்டில் சிறப்பு நிகழ்வாக 10ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கைக்கு வரும்போது அவர்களை பள்ளியில் சேர்க்கும்படி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post