அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதி
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
அரசுப் பள்ளியில் படித்தோருக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டப்படி, புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயில இடம் கிடைத்தது.
இதன்படி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, குமரி, நெல்லை மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் சேர்ந்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற 11 அரசுப் பள்ளி மாணவர்கள்.
இதற்கிடையே இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தாம் ஏற்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
இதன்படி, தலா ரூ. 50 ஆயிரத்துக்கான (மொத்தம் ரூ. 5.50 லட்சம்) காசோலைகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் வழங்கினார்.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் தங்களின் தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvinewsOnline@Gmail.com என்ற Email முகவரிக்கு எங்களுக்கு அனுப்பலாம்.. நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும் ..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment