Title of the document

 PET Teachers Counselling Date - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 IMG_20201028_200718 

 

  1. உடற்கல்வி ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு நவம்பர் 3 ,4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
  2.  உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு
  3. காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு
  4.  நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவிப்பு.
  5. PET Counselling Date proceedings - Click Here to Download 

551 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணிநாடுநர்கள் பட்டியல் , பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரியக் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது . இப்பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஆணை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் EMIS Online கலந்தாய்வு மூலம் வழங்கப்படவுள்ளது . மேலும் நேரடிநியமனம் கலந்தாய்வு சார்ந்து இணைப்பிலுள்ள படிவத்தில் முதன்மைக் கல்வி அலுவலகக் கோப்பு எண் / முதன்மைக் கல்வி அலுவலரின் பெயர் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து உடன் மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கான பணிநாடுநர்களின் வீட்டு முகவரிக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ளவும் அறிவுருத்தல்.


 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post