G.O 144 Date : 13.10.2020 College Professor Transfer G.O Published
இது குறித்து நமது கல்வி நியூஸ் வலைதளத்திற்கு கிடைத்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு கல்லூரிக் கல்விப் பணி விதி எண் .2 - இன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியியல் கல்லூரியில் இடப்பெயர்வு செய்ய வழிவகை உள்ளது எனவும் , எனவே ,
7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நீக்கும் விதமாக , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு , நியமனம் பெற்று , தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 ஆசிரியர்களையும் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களில் கல்வியியல் கல்லூரியில் பணிபுரிய தகுதியுள்ள 10 ஆசிரியர்கள் என மொத்தம் 16 ஆசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு இடப்பெயர்வு செய்து ஆணை வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
2 . கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் நன்கு பரிசீலிக்கப்பட்டது . அதனடிப்படையில் , 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நீக்கும் விதமாக , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்று தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் 6 ஆசிரியர்களையும் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களில் கல்வியியல் கல்லூரியில் பணிபுரிய தகுதியுள்ள 10 ஆசிரியர்கள் என மொத்தம் 16 ஆசிரியர்களை பின்வருமாறு அவர்களின் பெயர்களுக்கெதிரே உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு இடப்பெயர்வு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது Kalvi News வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment