Title of the document

" கற்போம் எழுதுவோம் " -  வயது வந்தோர் புதிய கல்வித் திட்டம் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு  

 


இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் கடிதங்கள் மற்றும் 21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board ( PAB ) கூட்ட முடிவுகளின் படி , தமிழகத்தில் , 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு , அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் , பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை , மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் , அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

 இப்புதிய வயது வந்தோர் கல்வி திட்டமானது , முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு Volunteer Mode அடிப்படையில் மட்டும் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக , அண்மையில் முடிந்த கற்கும் பாரதம் திட்டமானது , தமிழகத்தில் , அரியலூர் , பெரம்பலூர் , விழுப்புரம் , திருவண்ணாமலை , தருமபுரி , கிருஷ்ணகிரி , சேலம் , ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் , 108 ஊரக ஒன்றியங்களில் , 3602 கிராம பஞ்சாயத்து அளவில் , 2001 மக்கள் தொகைக்கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு , 25.39 இலட்சம் கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது.

மாவட்டங்களில் கல்லாதோர் எண்ணிக்கை :

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் படி , தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் , 15 வயதுக்குமேற்பட்ட 1.24 கோடி பேர் முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாதவர்களாக உள்ளது தெரியவந்துள்ளது. இவ்விவரங்கள் இணைப்பு 1 - ல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. வயது வந்தோர் கல்வி தொடர்பான தகவல்கள் மேலும் தொடர்ந்து பதிவிறக்கி தகவல் பெற உதவவும்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post