Title of the document

பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன் 

 பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என்று  அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார் .. கொரோனா தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அணைத்து தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்புகள் நிலவிக்கொண்டிருக்கின்றன .. பள்ளிகள் திறப்பு பற்றி  நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 senkottaian 


ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததால் மாணவர்களுக்கு கொரோனா பரவி உயிரிழப்பும் ஏற்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் முடிவெடுக்க முடியும்'' என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:''அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றி அதை இந்தாண்டே செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வி தொலைக்காட்சியில் 60 சதவீத பாடங்கள் மட்டும் நடத்தப்படுகிறது. எனவே தேர்வில் 60 சதவீத பாடத்திலிருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப்படும்'' என்றார்.

 ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post