Title of the document

  தமிழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவத்தை அடுத்து சேலத்தில் முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்கு நர்களின் பணிநியமன ஆணை மற்றும் கல்விச்சான்றிதழ்கள் திடீரென சரிபார்க்கப்பட்டு வருகிறது ) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மிட்ட அள்ளி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் , ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ராஜேந்திரன். இவர் , பத்தாம் வகுப்பு படிக்காமலேயே , போலி சான்றிதழ் கொடுத்து 21 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தது சமீபத்தில் கண்டுபிடிக் கப்பட்டது. இதே போல் , மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக அவ்வப்போது குற்றச் சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனையடுத்து , தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 , சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப , பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post