Title of the document

BEO அலுலவகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - ரூ .54,060 கைப்பற்றினர் !!

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குளச்சல் வட்டார கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை, குளச்சல் வெள்ளங்கட்டியில் உள்ள வட்டார கல்வி அலுவல கத்தில் தனியார் பள்ளிக ளுக்கு அரசுவழங்கும் பாட புத்தகங்களை விநியோகம் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் கள் எழுந்தது . இதையடுத்து , நாகர்கோவில் லஞ்ச ஒழிப் புத்துறை போலீசார் அங்கு நேற்று அதிரடி சோதனை நடத்தினர் , சோதனையில்அங்கிருந்தவட்டாரகல்வி அலுவலர் ஜெயராஜிடம் ரூ .54,060 ஐ கைப்பற்றினர் . அரசின் இலவச பாட புத்தகங்களை தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் விநியோகம் செய்ய முறை கேடாக பெற்ற தொகை என்பது விசாரணையில் தெரிய வந்தது . மாலை 4 மணிக்கு நடைபெற்ற சோதனை இரவு 7 மணி வரை தொடர்ந்தது .


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..  
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post