Title of the document

 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது!

  நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவல் படி இந்த ஆண்டு மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மட்டுமின்றி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.  இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், உடனடியாக இடஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது என்றும், இட ஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. 


தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post