Title of the document

 பொறியியல் 3-ம் கட்ட கலந்தாய்வு முடிவு - ஆர்வம் காட்டாத மாணவர்கள் -  90,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலி !இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..    

பொறியியல் படிப்புகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை 43,367 இடங்களே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,63,154 இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 497 இடங்கள் நிரம்பின.

கடந்த 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்ற பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 7,510 இடங்கள் நிரம்பின.கடந்த 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 2-ம் கட்ட கலந்தாய்வு முடிவில் 13,415 இடங்கள் நிரம்பின. கடந்த 16 முதல் இன்று வரை நடைபெற்ற 3-ம் கட்ட கலந்தாய்வு முடிவில் 20,999 இடங்கள் நிரம்பின

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மூன்று கட்ட கலந்தாய்வு ஆகியவை முடிவில் மொத்தமாக 43,367 இடங்களே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 3-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 35,133 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 20,999 பேர் மட்டுமே பங்கேற்று இடங்களை உறுதி செய்துள்ளனர்.

வரும் 28 வரை நடைபெற உள்ள இறுதிக் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 40,573 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்து கொள்பவர்களுக்கு 28-ம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய உடன், ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் 90,000-க்கும் மேற்பட்ட இடங்கள் நடப்பு கல்வியாண்டில் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post