Title of the document

2010ல் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அரசு பணிக்காக காத்திருக்கும் பதிவுமூப்பு ஆசிரியர்கள் - முன்னுரிமை கோரி வேண்டுகோள்

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதலில் தற்போது TET நடைமுறையில் இருப்பது நாம் அறிந்த ஒன்று. அனால் கடந்த 2010 மார்ச் மாதம் கல்வி மானியக் கோரிக்கையின் போது (சரியாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில்) அப்போதைய தமிழக முதல்வர் *டாக்டர் கலைஞர்* அவர்கள் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டார்.

அதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் இருந்த ஆசிரியப் பணி நாடுநர்களுக்கு 5:1 என்ற விகிதாச்சார ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி 2010 மே, ஜுலை, நவம்பர், டிசம்பர் & 2011 பிப்ரவரி என பல கட்டங்களில் CV எனப்படும் சான்றுகள் சரிபார்ப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றன.

பொதுவாக 5:1 என்ற விகிதத்தில் ஒரு பணி நாடுனர் பெயர் வந்தாலே அடுத்தடுத்த CV க்களில் விரைவில் பணி கிடைக்கும் என்ற சூழலில் அப்போதைய ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இருந்தன.

ஆனால் அடுத்தடுத்து மத்திய மாநில ஆட்சி மாற்றங்கள் வந்ததால் இந்த வகை வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஆசிரியர்களின் கனவு முற்றிலும் தகர்ந்தது. தற்போது வயதும் பத்து வருடங்கள் கூடியிருக்கும்பட்சத்தில் அரசு பணி என்பது கானல்நீராகி விடுமோ என்ற அச்சத்திலேயே காத்துக் கொண்டு உள்ளனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்பட்சத்தில், மீண்டும் *திமுக* ஆட்சியமைத்தால் இந்த வேலைவாய்ப்பக பதிவுமூப்பு வகை ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம், விரைவில் *திமுக* தலைமையை சந்தித்து இந்த கோரிக்கையை திமுகவின் தேர்தல் அறிக்கையில் சேர்த்து வெளியிட்டு கடந்து பத்து வருடங்களுக்கு மேலாக சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு ஆசிரியர் பணிக்காக காத்துள்ள ஆசிரியர்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக அதன் மாநிலத்தலைவர் திரு.இரா.ரவீந்திரன் இன்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post