Title of the document

 IMG_20201012_210915

மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது. விநியோக தடைகள் ஓரளவு குறைந்துவிட்டன, ஆனால் நுகர்வோர் தேவைக்கு  இன்னும் ஊக்கமளிக்க வேண்டும் என்றார்.


மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படும். கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். அரசு  ஊழியர்கள் கூடுதல் பணம் செலவழிப்பதால் பொருட்களின் தேவை அதிகரித்து, வியாபாரம் ஊக்கம் பெறும் என்றார். மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை  முன்பணமாக இந்தாண்டு வழங்கப்படும். ரூபே கார்டு மூலம் வழங்கப்படும் பணத்தை நிதியாண்டின் இறுதி வரை அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ரூ.10 ஆயிரம்  முன்பணம் மாதந்தோறும் ரூ.1000 என்ற அடிப்படையில் 10 மாதங்களில் பிடித்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நுகர்வோர் செலவினம் மற்றும் மூலதனச் செலவுகளை அதிகரிப்பதற்காக இன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் 2021 மார்ச் 31 க்குள் செலவிடப்பட வேண்டிய தேவையை ரூ  .73,000 கோடி அதிகரிக்கும் என்று மதிப்பிடுகிறோம். சாலைகள், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, நீர் வழங்கல், நகர்ப்புற மேம்பாடு மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  மூலதன உபகரணங்கள் ஆகியவற்றின் மையத்தின் மூலதன செலவினங்களுக்கு ரூ .25,000 கோடி கூடுதல் பட்ஜெட் வழங்கப்படும்.

சிறப்பு விழா அட்வான்ஸ் திட்டத்தின் ஒரு முறை வழங்க ரூ. 4,000 கோடி; அனைத்து மாநில அரசாங்கங்களும் வழங்கினால், மற்றொரு ரூ. 8,000 கோடி ரூபாய்  வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் இதை எந்த பண்டிகையிலும் செலவிடலாம் என்று தெரிவித்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post