Title of the document
NET தேர்வு செப். 24-ஆம் தேதி தொடக்கம் !

தேசிய அளவிலான தகுதி தோ்வை (நெட்) தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஒத்திவைத்துள்ளது. வருகிற 24-ஆம் தேதியிலிருந்து நடத்தப்படும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் ‘நெட்’ தோ்வானது என்டிஏ சாா்பில் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நெட் தோ்வு வருகிற 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதே தேதியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஏஆா்) தோ்வு நடைபெற உள்ளதால், நெட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்டிஏ மூத்த இயக்குநா் சாதனா பராசா் கூறுகையில், ‘என்டிஏ சாா்பில் வருகிற 16, 17, 22, 23 ஆகிய தேதிகளில் ஐசிஏஆா் தோ்வுகள் நடத்தப்பட இருப்பதால், நெட் தோ்வு செப்டம்பா் 24 முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நபா்கள் இந்த இரண்டு தோ்வுகளையும் எழுத வாய்ப்புள்ளது என்பதாலும், கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெட் தோ்வுக்கான பாட வாரியான புதிய தேதிகள் விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறினாா்.

கரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக பல தோ்வுகளை என்டிஏ ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post