Title of the document
NEET 2020 CUTOFF MARKS நடப்பாண்டுக்கான 'நீட்' தேர்வு 'கட்-ஆப்' மதிப்பெண் குறித்து தேர்வு எழுதிய மாணவர்களிடம்எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ பட்ட படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு கடந்த, 13ம் தேதிநடந்தது. நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண்களை தேசிய தேர்வு ஆணையம் வெளியிட உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் அடிப்படை மதிப்பெண் தான் 'கட்-ஆப்' என்றுகருதப்படுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 50 சதவீதமும், எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, 40 சதவீதமும் உள்ளன.

வெளிநாட்டில் மருத்துவ படிப்பபை தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும்.நீட் தேர்வு-2020 'கட்-ஆப்' மதிப்பெண் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை, மொத்தகாலியிடங்கள், வினாத்தாளின் கடின நிலை, இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக் கப்படும்.

தேசிய தேர்வு ஆணைய அறிவிப்பின்படி, நீட் கட்-ஆப் சதவீதம் என்பது பிற தேர்வர்களை ஒப்பிடும்போது, ஒரு குறிப்பிட்ட தேர்வரின் செயல்திறன் விகிதம் குறித்த ஒப்பீட்டை அளிக்கிறது. அதேநேரம் 'கட்-ஆப்' மதிப்பெண் என்பது அந்த ஒரு குறிப்பிட்ட தேர்வர் மொத்த மதிப்பெண்களில் பெற்றஅளவை வழங்குகிறது. கட்-ஆப் சதவீதமும், மதிப்பெண்களும் இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு வேறுபடுகின்றன.கடந்தாண்டு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 701-134, எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி.,பிரிவினருக்கு, 133-107 கட்-ஆப் மதிப்பெண்களாக இருந்தது.

இந்தாண்டு முதல் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சத வீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post