Title of the document
அரியர்' தேர்வை நடத்த கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

கல்லுாரி மாணவர்களுக்கு, 'அரியர்' தேர்வை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திருச்செந்துாரைச் சேர்ந்த, வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர்களுக்கான கட்டணம் செலுத்தி, தேர்வுக்காக காத்திருப்பவர்களுக்கும், தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, 2020 ஆக., 26ல் பிறப்பிக்கப்பட்டது.

பல்கலை கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில், உயர் கல்வித் துறை தலையிட உரிமையில்லை. விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்ய, உயர் கல்வித் துறைக்கு அதிகாரமில்லை; வேண்டுமானால், தேர்வை தள்ளி வைக்கலாம்.

தேர்வு நடத்துவது, முடிவுகளை வெளியிடுவது குறித்து, பல்கலை சிண்டிகேட், சென்ட், அகாடமிக் கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும். துணைத் தேர்வு எழுத, உயர் கல்வித் துறை அனுமதித்து உள்ளது. ஆனால், கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வுகளை ரத்து செய்து உள்ளது.மாணவர்கள் பலர், 10க்கும் மேல் அரியர் வைத்துள்ளனர். தேர்வு எழுதாமல் இவர்கள்தேர்ச்சி பெற்றால், கல்வி தரம் குறைந்து விடும்.

அரியர் வைத்திருப்பவர்களையும் தேர்ச்சி பெற்றதாக, இவ்வளவு அவசரப்பட்டு அறிவிக்க வேண்டியதில்லை.எனவே, உயர் கல்வித் துறை உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கல்லுாரி மாணவர்களுக்கு, அரியர் தேர்வை நடத்தும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post