Title of the document





தேசிய குழந்தைகள் விருதுக்கு, இணையதளம் வழியாக இன்றுக்குள் (15ம் தேதி) விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது

.இதுகுறித்து கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது-2020 அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக 'பால சக்தி புரஷ்கார்' எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக 'பால கல்யான் புரஷ்கார்' விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கான விருதிற்கு ரூ. 5 லட்சம் காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.nca-wcd.nic.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் இன்றுக்குள் (15ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் டில்லியில் ஜனாதிபதியால் தேசிய விருது வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post