
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 27.11.2019 அன்று 97 பதவிகளுக்கான BEO தேர்வின் அறிவிப்பை வெளியிட்டு. தேர்வானது 14.02.2020 முதல் 16.02.2020 வரை நிகழ்நிலை (online) முறையில் ஆறு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான உத்தேச விடைக்குறிப்பும் துரிதமாகவே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இத்தேர்வினை எழுத 64000 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் தேர்வு நடைப்பெற்று 7 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர்.. எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மிக விரைவில் தேர்வு முடிவினை வெளியிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் 2018-2019 கல்வி ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் 97 பதவிகளுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.2019-2020 கல்வி ஆண்டிற்கான காலிப்பணியிடங்களையும் சேர்த்து தேர்வு முடிவினை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறோம்..
இப்படிக்கு
BEO தேர்வர்கள் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment