கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்களை அதிகரிக்க அனுமதி: அரசு உத்தரவு.

Join Our KalviNews Telegram Group - Click Here

கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்களை அதிகரிக்க அனுமதி: அரசு உத்தரவு. 
 
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தாண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரிக்க தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி கலை பிரிவுகளில் 20 சதவீத இடத்தையும், அறிவியல் பிரிவுகளில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீத இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த சம்பந்தட்ட பல்கலைக்கழங்களில் அனுமதி பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்