15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கினார் முதல்வர் பழனிசாமி

Join Our KalviNews Telegram Group - Click Here
15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கினார் முதல்வர் பழனிசாமி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று ( 7.9.2020 ) தலைமைச் செயலகத்தில் , பள்ளிக்கல்வித் துறை சார்பில் , ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் , வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள் . மேலும் , 2020 - ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை திருமதி இரா.சி. சரஸ்வதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு . ஸ்ரீதிலீப் ஆகியோர் விருதிற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள் .

தமிழகத்தில் 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்..
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்