TET - ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என, அறிவிக்க வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், ௨௦௧௩ல், நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி உள்ளது. ஆறு ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனங்களே நடத்தப்படாதது, மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.பீஹார், ஹரியானா மாநிலங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள், நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
அதேபோல், தமிழகத்திலும் மாற்றப்பட வேண்டும்.அதன் வாயிலாக, ஆசிரியர் பணியை எதிர்பார்த்து, ஆறு ஆண்டுகளாக காத்திருக்கும், ௮௦ ஆயிரம் பேர் வாழ்வில், அரசு ஒளியேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Thank you
ReplyDeleteThank you
ReplyDeletePost a Comment