அரசு கல்லூரிகளில் உள்ள M.ED பேராசிரியர்களை B.ED கல்லூரிகளுக்கு மாற்ற திட்டம்

Join Our KalviNews Telegram Group - Click Here
அரசு கல்லூரிகளில் உள்ள M.ED பேராசிரியர்களை B.ED கல்லூரிகளுக்கு மாற்ற திட்டம்

தமிழகத்தில் அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் எம்.எட்., தகுதி பெற்ற உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்துள்ளது.

இவர்களை அரசு கல்வியியல் (பி.எட்.,) கல்லுாரிகளுக்கு மாற்றம் செய்ய கல்லுாரிக் கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.மாநில அளவில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. சில பல்கலை உறுப்புக் கல்லுாரிகளும் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இங்கு எம்.எட்., மற்றும் நெட், ஸ்லெட் அல்லது பிஎச்.டி., முடித்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்

இவர்கள் தொடர்பான விவரங்களை கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர்கள் சேகரித்து இயக்குநர் பூரணச்சந்திரனுக்கு அனுப்பியுள்ளனர். அரசு பி.எட்., கல்லுாரிகளுக்கு இவர்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முடிவால் கலைக் கல்லுாரி சீனியர் பேராசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அரசு கலைக் கல்லுாரிகளில் 2012க்கு பின் நியமனம் இல்லை. எம்.எட்., தகுதியுள்ளோர் தற்போது 'கல்லுாரி முதல்வர்' பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர்.இவர்கள் பி.எட்., கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டால் ஜூனியர் நிலையில் அங்கு பணியை தொடர வேண்டும். 

மேலும் சென்னை, புதுக்கோட்டை உட்பட சில மாவட்டங்களில் தான் பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இதனால் பணியிட மாற்றம் என்பது பெரும் சுமையாக இருக்கும். எனவே விருப்பம் உள்ளோரை மட்டும் மாற்றம் செய்ய வேண்டும் என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்