Title of the document

PLUS ONE - மாணவர் சேர்க்கை துவக்கம் விரும்பிய பாடப்பிரிவு ஒதுக்க அறிவுரை!

 

  பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை ஒதுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும், தேர்ச்சி செய்யப்பட்டனர். மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில், மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.இந்நிலையில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.


அனைத்து அரசு, அரசு உதவி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று, பாடப் பிரிவுகளை ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுரை:மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில், பாடப் பிரிவுகளை ஒதுக்க வேண்டும். அரசின், 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, இடங்கள் ஒதுக்க வேண்டும்.


மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை வழங்க வேண்டும். எந்த காரணத்துக்காகவும், அரசு பட்டியலிடாத எந்த வித கட்டணம் மற்றும் நன்கொடைகள் வசூலிக்கக் கூடாது. புகார்கள் வந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post