National Education Policy in Tamil - புதிய கல்விக்கொள்கை 2020 ன் தமிழ் வடிவம் :

அனைவருக்கும் வணக்கம்,
இந்த கோப்பில் இருப்பது மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை
2020வின் தமிழ் வடிவம். இது அதிகார்வப்பூர்வ மொழிபெயர்ப்பு அல்ல. அரசு இதனை
அதிகார்வப்பூர்வமான மொழிமாற்றம் செய்து வெளியிடும். அது எப்போது வரும்
என்று தெரியாததால் தேசிய கல்விக்கொள்கை பற்றிய உரையாடல்கள் ஏற்கனவே
நடந்துகொண்டிருப்பதாலும் கொள்கை தமிழில் இருந்தால் இன்னும் பரவலான
உரையாடலுக்கு வித்திடும் என்பதாலும் இந்த இடைக்கால கோப்பு.
நண்பர்கள்
சுமார் 50 நபர்கள் ஒன்றிணைத்து ஒரு வார இறுதியில் முடித்த மொழிமாற்றம்.
எண்ணம் தோன்றிய 75 மணி நேரத்திற்குள் இதனை முடித்திருக்கின்றோம். நிச்சயம்
மிகச்சரியான கலைச்சொற்களை பயன்படுத்தாமல் போயிருக்கலாம். வரி வரியாக
இரண்டுக்கு மூன்று நபர்கள் திருத்தம் செய்தே இணையத்தில் வெளியிடுகின்றோம்.
வாணி பிழை திருத்திக்கும் நன்றி. இரவு பகல் பாராமல் மொழி பெயர்ப்பில் துணை
நின்ற அத்துனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
வாசிப்போம். உரையாடுவோம்.
Post a Comment