Title of the document
Latest Kalvi News : அரசு பள்ளி மாணவி IAS தேர்வில் முதலிடம்! 




அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில், புதுச்சேரி மாநிலத்தில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவியை, அமைச்சர், கலெக்டர் பாராட்டினர்.


காரைக்கால், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்; கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா. தம்பதியின் மகள் சரண்யா, 27; காரைக்கால் ஓ.என்.ஜி.சி., பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரியில், இ.சி.இ., பிரிவில், 2015ல், பட்டம் பெற்றார். மூன்றாவது முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில், அகில இந்திய அளவில், 36வது இடத்திலும், புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

சரண்யாவிற்கு, அமைச்சர் கமலக்கண்ணன், கலெக் டர் அர்ஜுன் சர்மா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். சரண்யா கூறியதாவது: நான் அரசு பள்ளியில் படித்தேன். பள்ளி பருவத்திலேயே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என விரும்பினேன். அதனால், சிவில் சர்வீஸ் தேர்விற்கான பயிற்சி எடுத்தேன். இரு முறை தோல்வி அடைந்தாலும், விடா முயற்சி மேற்கொண்டதில், மூன்றாம் முறை தேர்வில், அகில இந்திய அளவில், 32வது இடமும், மாநிலத்தில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால், அரசு பள்ளி மாணவர்களும் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்கலாம். கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன்.இவ்வாறு கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post