Title of the document
தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டங்களை குறைக்க உயர்நீதிமன்றம் யோசனை! 

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் வகுப்புகள் நடந்துவரும் நிலையில், பாடத்திட்டங்களை குறைக்கலாமே என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை கொடுத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் மொபைல், லேப்டாப் போன்றவற்றை தொடர்ச்சியாக பார்த்து வருவதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளுடைய விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. ஏற்கனவே மத்திய அரசு இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டதாகவும், அதேபோல மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழக அரசும் ஒரு அரசாணை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையின் இறுதிக்கட்ட வாதம் என்பது தொடங்கியது. அப்போது ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக நாள் முழுவதும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

ஒரேநாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசு, ஆபாச இணையதளங்களை தடைவிதிக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ச்சியாக மாணவர்கள் கம்ப்யூட்டர் பார்ப்பதால் மாணவர்களுக்கு Computer Vision Syndrome என்ற பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இந்த கல்வி முறையால் கிராமப்புற மாணவர்கள் கல்வி கிடைக்காமல் இருப்பது சமச்சீர் கல்வி கொள்கைக்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டங்களை குறைக்கலாமே என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆன்லைன் வகுப்பினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இத்தகைய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பள்ளிகள் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து அரசு தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கின் விசாரணை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post