அரசு கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு !

Join Our KalviNews Telegram Group - Click Here

கல்லுாரியில் ஷிப்ட் முறை ரத்து செய்யப்பட்டதால்  மாணவர் எண்ணிக்கை குறைவு !


அரசு கல்லுாரிகளில், 'ஷிப்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், வேலைக்கு சென்று படித்த மாணவர்கள், பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அரசு கல்லுாரிகளில், காலை மற்றும் மதியம் என, 'ஷிப்ட்' முறையில் வகுப்புகள் நடந்தன.

 

கல்லுாரி பேராசிரியர்கள் கூறுவது :கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட தொழில் நகரங்களில், ஷிப்ட் முறையில், கல்வி பயிலும் மாணவ - மாணவியர், பின்னலாடை நிறுவனங்களுக்கு, பகுதி நேரமாக வேலைக்கு சென்று சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.


நீலகிரி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களில், கல்லுாரி படிப்புடன், பகுதி நேரமாக, ஓட்டல் உட்பட சுற்றுலா சார்ந்த பணிகளில், தங்களை ஈடுபடுத்தி வந்தனர். தற்போது, ஷிப்ட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கும் சூழல் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பெரும்பாலும் அரசுக்கல்லுாரியில் படிக்கின்றனர்.தற்போது, 'ஷிப்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அரசு கல்லுாரியில், மாணவர் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்