பிளஸ் 1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் !

Join Our KalviNews Telegram Group - Click Here

பிளஸ் 1 விடைத்தாள் நகல் இன்று பதிவிறக்கலாம் !


பிளஸ் 1 விடைத்தாள் நகல்களை, இன்று பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தால், அவர்கள் இன்று முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.


இன்று பகல், 3:00 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.நகலை பதிவிறக்கம் செய்வோர், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, 31ம் தேதி முதல், செப்., 2 வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்