கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் - தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும் !

Join Our KalviNews Telegram Group - Click Here
 கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் - தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும் !

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், அனைத்து மாணவர்களும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தவிர்த்து கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தநிலையில் அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அதில் இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

நடத்தாத தேர்வுக்கு மாணவர்களை கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது, மதிப்பெண் கணக்கிடும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்