Title of the document
 


கல்வி என்பது கூட்டு முயற்சியால் கைகூடுவதாகும். இந்நிகழ்வானது சமூகம் - பெற்றோர் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனத் தொடர் சங்கிலியின் முழுமையான பங்கேற்பாக அமைந்தால் மட்டுமே வெற்றி காண முடியும் எனினும் பள்ளியைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பு தலைமையாசிரியரை மட்டுமே சார்ந்ததாகும் பள்ளி வளர்ச்சிக்கான தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதும் தலைமையாசிரியரின்  முதன்மையான கடமையாகும்.

தலைமையாசிரியர் நல்ல தலைமைப் பண்பாளராகவும் பள்ளியின் வளர்ச்சியில் வழிகாட்டுபவராகவும் , தொண்டுள்ளம் கொண்டவராகவும் , அர்பணிப்பு குணம் உள்ளவராகவும் , தெளிவான சிந்தனை உடையவராகவும் , தம் பணியில் முழுமைப்படுத்திக் கொள்ள இக்கையேடு சிறந்த வழிகாட்டியாக அமையும். தலைமையாசிரியர் என்பவர் பள்ளிக்கு முன் வந்து பின் செல்பவராக இருத்தல் வேண்டும் . காலம் தவறாமைக்கு சான்றாக விளங்க வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முயற்சியால் மட்டுமே பள்ளியை அனைத்து நிகழ்வுகளிலும் முன்னேற்றம் அடைய செய்ய முடியும்

இக்கையேட்டினை நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்டத்தின் கல்வித்தரம் உயர அனைவரும் பாடுபட வேண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.

தொகுப்பு :

திரு சி. சுகுமார்
தலைமையாசிரியர்



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post