பொது மக்களுக்குகபசுர குடிநீர்

Join Our KalviNews Telegram Group - Click Here
இனியன் கார்டன் நலச்சங்கம்,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து சண்முகாநகர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நாச்சிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் பூபாலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்..
 இனியன் கார்டன் நலச்சங்க தலைவர் ஷேக் முஹம்மது அலி தலைமை வகிக்க செயலர் மரிய ஜோசப் பொருளாளர் அண்ணாதுரை துணைத் தலைவர் முஸ்தபா துணைச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் பேசுகையில்,
வைரஸ் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவுகின்றது.  


காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத் திணறல், தலைவலி, தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளவர்கள் அவசியம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கவும், குணமாக்கவும் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீரானது நிலவேம்பு ,ஆடாதொடை, சீந்தில் கொடி, கற்பூரவள்ளி, திப்பிலி ,அக்ரகாரம், கோரைக்கிழங்கு, கோஷ்டம், கடுக்காய்த் தோல், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி உள்ளிட்ட 15 மூலிகைகள் சேர்ந்து கபசுர குடிநீர் பொடி அரசு பொது மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் வழங்கப்படுகின்றது.


 5 கிராம் கபசுர குடிநீர் பொடியினை 200 மில்லி தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மில்லியாகச் சுருக்கி காலை, மாலை அருந்தினால் காய்ச்சல் குணமாகும்.
 மேலும் இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டை கொண்டு மூக்கு வாயை மூடிக்கொள்ள வேண்டும் சாப்பிடும் முன் கைகளை கிருமிநாசினி கொண்டு நன்றாக கழுவ வேண்டும் ..


காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து மருத்துவரை பார்க்க வேண்டும் என்றார்.  சண்முகா நகர் இனியன்  கார்டன் நலச்சங்கம் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்