மாணவர்களுக்கான பாடப் பொருள்கள் வீடியோ பதிவாக்கும் பணி தொடக்கம்

Join Our KalviNews Telegram Group - Click Here
மாணவர்களுக்கான பாடப் பொருள்கள் வீடியோ பதிவாக்கும் பணி விருதுநகர் மாவட்டத்தில் தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான பாடப் பொருள் வீடியோவாக பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், நடப்பு கல்வியாண்டிற்கு 2 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரைக்கான பாடத்திற்குரிய விருப்பமுறைப் பாடப் பொருள் மற்றும் பயிற்சி வினாக்களை வீடியோவாக பதிவு செய்து மாணவர்கள் இந்த கொரோனா காலத்தில் பயன்பெற நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து 4 ம் வகுப்பு தமிழ் மற்றும் 7, 8 வகுப்புகளுக்கு குறிப்பிட்ட பாடங்களுக்கு சிறப்பு மற்றும் தனித்திறமைகள் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை நடத்தி வீடியோ பதிவு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பணியைத் தொடங்கி வைத்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாணவர்களுக்கு இத் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே பாடங்களை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாணவர்கள் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சியில் இப் போது ஒளிபரப்பப்பட்டு வரும் பாடங்களை கவனத்துடன் கேட்டு, தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்.  ஆசிரியர்கள் மிகத் திறமையாக பாடங்களை நடத்தி வருகிறார்கள் என்றார். இப் படப் பதிவு இம் மாத இறுதிவரை நடைபெறுகிறது என்றார். முன்னதாக மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார்.


நிகழ்ச்சியில் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மணிவண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) வீ.வீரபாண்டியராஜ், லயன்ஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் திவ்யநாதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி, ஆசிரியப் பயிற்றுநர்கள் மு.தனலட்சுமி, மு.மீனலோஷினி, ம.கனகலட்சுமி, க.செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கு.முனியசாமி நன்றி கூறினார்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்