Title of the document
கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் கொரோனா பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்றும் கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

பொது ஊரடங்கில் இருந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள்:

  • * நாடு முழுவதும் இரவில் தனிமனித நாடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது
  • * பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை
  • * உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி
  • * சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு; வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்
  • * மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கு செயல்பட விதித்த தடை நீட்டிப்பு
  • * திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு
  • * பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது.
  • * மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடை இல்லை- இ-பாஸ் தேவையில்லை
  • * வாடிக்கையாளர்களின் சமூக இடைவெளியுடன் வர்த்தக நிறுவனங்கள் இயங்க அனுமதி
  • * 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post