Title of the document
2019 -2020 கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - இயக்குநர் செயல்முறைகள் !!

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தினவிழாவாகக் கொண்டாடப்பட்டு, அவ்விழாவில் தொடக்க நடுநிலை உயர்நிலை/

மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களை தேர்வு செய்து
அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது"
வழங்கப்பட்டு வருகிறது

2019. 2020 ஆம் ஆண்டிற்கான டாக்டர்
இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா

05.09.2020 அன்று ஆசிரியர் தினவிழாவாக நடைபெற உள்ளது. எனவே, பார்வை (1)ல்
கண்டுள்ள அரசாணையில்
தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பகரில் பணிபுரியும்
ஆசிரியர்கள், சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களை தேர்வு செய்து மாநில நல்லாசிரியர்
விருதிற்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது அவ்வாறு

ஆசிரியர்களை தேர்வு செய்யும் தேர்வில், மாவட்ட அளவில் குழு அமைத்து வருங்காலங்களில் எவ்வித புகார்களுக்கும், இடமளிக்க வண்ணம் பார்வையில் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி
ஆசிரியர்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, அவர்களின் விவரங்களையும் மற்றும்
கருத்துருக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியாகப் பூர்த்தி செய்து
14-08-2020 க்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி) அவர்கள் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines)

ஆம் கல்வியாண்டிற்கான 05.09.2020 அன்று நடைபெற உள்ள ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கிட, பள்ளிக் கல்வித்துறை ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிட ஏதுவாக கருத்துருக்கள் பெறப்பட வேண்டும். வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தந்தை பரிந்துரை செய்தல் வேண்டும்

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் தமது பணியில் கடமை தவறாதவராகவும், காலம் தவறாமல் காலை நேரம் பாராது பணிபுரிபவர்களும், தவறாது பள்ளிக்கு வருகை தந்து தன்னலமற்ற வகையில், எந்தவித பயனும் கருதாமல், தொண்டாற்றி மாணவர்களின் கல்வி முன்னேற்றமே பெரியதெனக் கருதி செயல்பட்டு, அதன் மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கையையும், தேர்ச்சி சதவிகிதத்தினையும் அதிகரிக்கச் செய்துள்ள ஆசிரியர்களை இனம் கண்டு அவர்களை இவ்விருது பெறுவதற்காகப் பரிந்துரைக்கப்படல் வேண்டும்

நடத்தை விதிகளுக்கு முரணாகத் தனிப்பயிற்சி வகுப்புகள் எடுத்து, கல்வியினை வணிக ரீதியாக குருதி செயல்படும் ஆசிரியர்களையும், தனியார் பள்ளிகளில் நிர்வாகியாக இருக்கும் ஆசிரியர்களையும் தேர்வு செய்து இவ்விருதிற்காகப்

பரிந்துரை செய்தல் கூடாது

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் எந்தவித ஒழுங்கீன நடவடிக்கையும் குற்றச்சாட்டிற்கும் உட்படாதவராகவும், அரசியலில் ஈடுபட்டு அதன் மூலம் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாதவராகவும் பொது வாழ்விலும் தூய்மையானவராகவும், பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும் இருத்தல்

வேண்டும்

குற்றப் பின்னனியில் உள்ளவர்கள் தேர்வு செய்து விருது பெற பரிந்துரைக்கப்பட்டது எனப் புகார் மனுவின் மூலம் பின்னர் தெரிய வந்தால் அதற்கான முழு பொறுப்பும் மாவட்டத் தேர்வுக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களே ஏற்க வேண்டும் மேலும் துறைரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே மாவட்டத் தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது

6. மாநில நல்லாசிரியர் விருதிற்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை என்றோ விருது பெறுவதற்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்றோ தெரிவிக்காமல் விருது பெறத் தகுதியான ஆசிரியர்களை ஆய்வு அலுவலர்கள் இனங்கண்டு விருது பெறுவதற்காகப் பரிந்துரைக்கப்படல் வேண்டும்

விருதிற்குப் பரிந்துரைக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளும், இதர ஆசிரியர்கள் 15 ஆண்டுகளும் பணியாற்றியிருத்தல் வேண்டும்

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர் நடப்புக் கல்வியாண்டில் (2019-20ல்) குறைந்தது மாதங்கள் (In Regular Service) மற்றும் அதற்கு மேலும் பணியாற்றியிருக்க

வேண்டும். மேலும், 30.09.2019 க்கு முன் அகவை முதிரிவின் காரணமாக ஓய்வு

பெற்ற ஆசிரியர்களை தேர்வு செய்திடல் கூடாது

9. டாக்டர் ராதாகிருஷ்ணன்

விருதுக்காக வடிவமைக்கப்பட்ட படிவத்தில்

கோரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து அது சார்பான கருத்துருக்களை மாவட்டத் தேர்வுகள் குழுவானது நன்கு கவனமுடன் ஆய்வுகளும்

மற்றும் பரிசீலனை களும் மேற்கொண்டு, வரும் ஆகஸ்ட் 14 க்குள் முழு வடிவில்

கருத்துருக்களை அனுப்பி வைத்தல் வேண்டும்

விண்ணப்பித்த ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சான்றுகள் மற்றும் இதர தகுதிகளுக்குரிய ஆவணங்களுடன் மற்றும் பள்ளி பார்வையின் போது சேகரித்த குறிப்புகளின் அடிப்படையில் மாவட்டக் குழுவினால் சார்ந்த ஆசிரியர்களை நேர்காணலுக்கு அழைத்து ஆய்வு மற்றும் மதிப்பீடுகள் செய்திடல் வேண்டும்

Click here to download full details pdf

மாவட்ட ஆய்வுக் குழுவின் மூலம் விருது பெறத் தகுதியானவர்கள் தேர்வு செய்து அதற்கான கருத்துருக்களைத் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ள எண்ணிக்கைக்கேற்றவாறு 112 என்ற விகிதத்தில் தேர்வு செய்து

ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியாக சாதாரண புத்தக வடிவில் தயார் செய்து அனுப்பிடல் வேண்டும்

சுயநிதி / மெட்ரிக் பள்ளிகள் சார்ந்து வருவாய் மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் தேர்வு

செய்யப்பட உள்ளதால், 1:4 என்ற விகிதத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியாக சாதாரண புத்தக வடிவில் தயார் செய்து அனுப்பிடல் வேண்டும்

மாவட்டத் தேர்வுக் குழுவால் இறுதி செய்யப்பட்ட ஆசிரியர்களின் சார்பான கருத்துருக்கள் ஒரு நகல் பதிவு அஞ்சல் மூலம், சென்னை -6, பள்ளிக் கல்வி

இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களது பெயரிட்ட உறையில் பாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" "மந்தனம்” எனக் குறிப்பிட்டு வரும் ஆகஸ்டு 14ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க அனைத்து ஆய்வு அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும், இணைப்புப் படிவத்தை முழுவதுமாகப் பூர்த்தி

செய்து, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) அவர்களின்

மின்னஞ்சல் (Mssedanic.in) முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது

பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் ரகசியம் காத்து, தனது சொந்த பொறுப்பில் பாதுகாத்து வைத்திருக்க

வேண்டும்

மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு
தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும்
பரிந்துரை செய்தல் கூடாது.

பள்ளிக்கல்வி இயக்குநர்.


இணைப்பு

1. அரசாணை எண் 518, பள்ளிக் கல்வித் (ப.க 1{1)) துறை , நாள், 31.07.2018,

படிவம் -

பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post