2019 - 2020 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலக்கெடு !!

Join Our KalviNews Telegram Group - Click Here
2019 - 20 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலக்கெடு

2019 - 20-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

 கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், தற்போது கரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலங்களில் மட்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 வரை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 ஏற்கனவே 2018 - 19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்து கடந்த வாரம் உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source:Dinamani
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்