பள்ளிகல்வித்துறை செய்திகள் : பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ..இந்த ஆண்டு 30% பாடங்கள் குறைப்பு ..

Join Our KalviNews Telegram Group - Click Here
தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 30 சதவிகித பாடத்திட்டம் குறைவு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.. இது குறித்த செய்தியை விரிவான செய்தி தற்போது பார்ப்போம் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 30 சதவீத பாடத் திட்டம் குறைப்பு என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன ..


கொரோனா தொற்று  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன இதன் காரணமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஆனது ஜூலை மாதம் பத்தாம் தேதி ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இது எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியும் பெரும்பாலான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வருகின்றன. கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் தற்போது திறக்க முடியாத ஒரு சூழலில் நமது பள்ளி கல்வித்துறை உள்ளது.. இதனால் குறைந்த நாட்களில் முழுமையான பாடத்தை மாணவர்கள் படிக்க முடியாது என்ற காரணத்தினால் தற்போது மீதமிருக்கும் நாட்களுக்கு மட்டும் திட்டத்தை குறைத்து அதனை மாணவர்களுக்கு புகட்டலாம் என்று நமது பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது..

 இதற்காக நமது பாடத் திட்டத்தை குறைப்பது மற்றும் பள்ளி திறக்கும் நாட்கள் அறிவிப்பது இதில் உள்ள சாதக பாதகங்களை அரசுக்கு தெரியப்படுத்த பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தலைமையில், கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது தற்போது இறுதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது..  இந்த குழுவின் அறிக்கையின் படி நமது தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளிகள் திறக்கும் தேதி மற்றும் பாடத்திட்டங்களை குறைப்பது போன்ற தகவல்களை வெளியிடுவார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 முன்னதாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஆனது 30 சதவிகிதம் குறைப்பு என்று இரண்டு நாட்களுக்கு முன்னதாக நமது மத்திய அரசு வெளியிட்டு இருந்தது தற்போது தமிழக பள்ளிக் கல்வித் துறையிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைவு என்று தகவல்கள் வெளியாகியுள்ளதால் மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

3 கருத்துகள்