Title of the document


 அனுப்புநர் திரு.ஜானி டாம் வர்கீஸ் .. , இ.ஆ.ப. , மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் , மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம் , சென்னை -5 . பெறுநர் அரசு செயலாளர் , மாற்றுத்திறனாளிகள் நலத் துறை , தலைமைச் செயலகம் , சென்னை -9 . ந.க.எண் .3 / நிர் -2 / 2020 நாள் .30.06.2020 பொருள் பணியமைப்பு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம் , சென்னை -5 . Covid 19 கொரோனா தொற்று நோய் தடுப்பதற்கு , 01.07.2020 முதல் 31.07.2020 வரை அரசால் 144 தடை விதிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிற துறைகளிலும் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிமேற்கொள்வதிலிருந்து விலக்களிக்க கோருதல்- தொடர்பாக , பார்வை 1.அரசாணை நிலை எண் .152 , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாள் .23.03.2020 . 2. அரசாணை நிலை எண் .2 மாற்றுத்திறனாளிகள் நலத் ( அகமு ) துறை நாள் .31.03.2020 . 


| 3.அரசாணை நிலை எண் .3 மாற்றுத்திறனாளிகள் நலத் ( அருமுத்துறை நாள் . 17.04.2020 . 4. அரசாணை நிலை எண் .4 மாற்றுத்திறனாளிகள் நலத் ( அருமு ) துறை நாள் .05.05.2020 , 5.அரசானை நிலை எண் .5 மாற்றுத்திறனாளிகள் நலத் ( அருமுத்துறை நாள் .21.05.2020 , 6.அரசாணை நிலை எண் .6 மாற்றுத்திறனாளிகள் நலத் ( அநமுத்துறை நாள் .03.06.2020 . 7.அரசு செய்தி வெளியீடு எண் .451 நாள் .29.06.2020 , 5. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் .பார்வை 1 ல் காணும் அரசாணையின்படி , கொளானாவைரஸ் நோய் தொற்றை தவிர்க்க , அத்தியாவசிய பணிக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் பணியாற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது . 


மேற்காணும் துறைகளில் மாற்றுத்திறனாளி பணியாளர்களும் பணிபுரியும் நேர்வில் இப்பணியாளர்களின் உடல் குறைப்பாட்டினையும் , பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாட்களில் அலுவலகத்தில் பணிமேற்கொள்வதிலிருந்து ( Exemption ) தவிர்ப்பு வழங்க மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களின் கோரிக்கையை அடு இதனை ஏற்று அவர்கள் பணியில் இருப்பதாக கருதி அனுமதி வழங்க மேற்படி பார்வை 1 , 2 , 3 , 4 , மற்றும் 5 ல் கண்ட அரசாணையின்படி 24.03.2020 முதல் 31,05.2020 வரை மாற்றுத்திறனாளிகள் தங்கள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . 


மேலும் பார்வை 6 ல் காணும் அரசாணையின்படி சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய தடை தளர்வுகள் இல்லாத மாவட்ட அரசு அலுவலகங்ளில்பணிபுரிந்ருது வரும் மாற்றுத்திறனாளிகள் பணியாளர்களுக்கு மட்டும் 01.6.2020 முதல் 30.06.2020 வரை மாற்றுத்திறனாளிகள் தங்கள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . பார்வை 7 ல் காணும் அரசு செய்தியின்படி கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் , தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு , 31.07.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .


 மேலும் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியர் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் , மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பணிபுரியும் நேர்வில் இப்பணியாளர்களின் உடல் குறைப்பாட்டினையும் , பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு 01.7.2020 முதல் 31.07.2020 வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு பணிகள் மேற்கொள்வதிலிருந்து விலக்களிக்கும் ( Exemption ) ஆணை வழங்குமாறு அரசிணை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் . 

மற்றும் ( ஓம் ! - ) ஜானி டாம் வர்கீஸ் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் // ஆணைப்படி / Amboy இணை இயக்குநர் 



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post