Title of the document

 ஒவ்வொரு இரண்டாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்களில் சுத்தப்படுத்தும் பணி தமிழக அரசு உத்தரவு



ஒவ்வொரு இரண்டாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்களில் சுத்தப்படுத்தும் பணி தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் கடந்த மே 18-ந் தேதியில் இருந்து 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன. வாரத்துக்கு 6 நாட்கள் பணி நாட்களாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், ஊரடங்கு காலகட்டத்தில் தடுப்பு நடவடிக்கையாக அலுவலக வளாகங்களும், பொது பகுதிகளும் தொற்று ஏற்படாத வகையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு இதற்காக கொடுத்துள்ள வழிகாட்டியின்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் முழு அளவிலான சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதற்காக இரண்டாவது சனிக்கிழமைகளில் அலுவலகம் இயங்காமல், சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். இந்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. 👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽திருப்பூரில் வேலை!
    வருடம் முழுதும் வேலை உண்டு.
    பனியன் கம்பெனியில் உதவியாளர் வேலை.

    8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு
    சம்பளம் ஒரு நாளைக்கு ₹400.
    தங்குமிடம் இலவசம்.
    குறைந்த செலவில் சாப்பாடு வழங்கப்படும்.

    வேலைநேரம்
    08:30 am to 08:30 pm.

    உடனே பணியில் சேரலாம். 50 நாட்களுக்கு ஒருமுறை ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    செல்
    9150490460.
    👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post