ஆசிரியருக்கு பாராட்டு முத்திரை: கல்வித்துறையில் ஊக்குவிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here
Tamil_News_large_2554379

பள்ளி கல்வித்துறை, அரசு மற்றும் உதவிபெறும் ஆசிரியர்களுக்கு, 'கூகுள், மைக்ரோசாப்ட்' நிறுவனங்களை போல, பாராட்டு முத்திரைகளை, 'தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம்' மூலமாக வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், 'தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் (TNTP)' எனும்ஆசிரியர்களுக்கான இணைய தளத்தை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது.

அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம், புதிய பாடத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல், பயிற்சி வழங்கல், வினாத்தாள்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வழிமுறைகள் என ஏராளமான வசதிகள் உள்ளன.ஆசிரியர்கள் பாடம் சார்ந்த வீடியோக்களை தயாரித்தும், இதில் பதிவேற்றம் செய்யலாம். பாடப்புத்தகத்தில் உள்ள, 'க்யூஆர்' கோடுக்கான வீடியோக்கள் அனைத்தும் இருப்பதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி, எளிமையாகியுள்ளது.

இதுவரை, 2.6 லட்சம் ஆசிரியர்கள் இந்த இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.ஊரடங்கு காலத்திலும், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்காக இந்த இணையதளம் வாயிலாக கற்பித்தல் பணியில் சிறப்பாக பங்காற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக, பாராட்டு முத்திரையை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்