கொரோனா பணிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here
கொரோனா பணிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு! குமுறும் ஆசிரியர்கள்.


கொரோனா பணிக்கு கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி யாகி உள்ளது. இதற்கு காரணமான கல்வி அலுவலகர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன. 50வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை கொரோனா பணிகளுக்கு அனுப்பக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பள்ளிகளின் பணிபுரியும் ஆசிரியர்களை கட்டாயப்பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளனர். பணிக்கு வராத ஆசிரியர்களை இடை நீக்கம் செய்வோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

தொடக்க கல்வி அலுவலரின் மிரட்டல் காரணமாக பல ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணிக்கு சென்று வருகின்றனர். அவர்களில் பலருக்கு மண்டல அலுவலகத்தில் டெலி கவுன்சிலிங் சென்டரிலும், பலருக்கு வீடு விடாக சென்று கணக்கெடுக்கும் பணியும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்களை இந்த பணிக்காக மாநகராட்சி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்த பணிக்ககு செல்லும் ஆசிரியர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உடையும் இல்லாமல் வெறும் முகக்கவசம் அணிந்து மட்டுமே பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இதனால் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் வேறு நோய்களால் மரணம் அடைந்தாக மாநகராட்சி மறுத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மண்டலம் 10ல் (கோடம்பாக்கம்) உள்ள மண்டல அலுவலகத்தில் டெலி கவுன்சிலிங் பணிக்கு சென்ற ஆசிரியை ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் நெசப்பாக்கத்தில் உள்ள கொரோன சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். பின்னர் இரவு அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துஇருப்பதாக கூறப்படுகிறது. இதுஅவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியை சென்னை, திடீர் நகர் மாநகராட்சி பள்ளியில் இடை நிலை ஆசிரியையாக பணி புரிந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளின் மிரட்டலால் பணிக்கு சென்ற நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து அந்த மண்டலத்தில் அவருடன் பணியாற்றிய சக ஆசிரியர்கள் உள்பட, ஆசிரியை குடும்பத்தினருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா பணிக்கு விரும்பமில்லாத ஆசிரியர்களையும், வயது முதிர்ந்த ஆசிரியர்களையும் அழைக்க வேண்டாம் என ஆசிரியர் சங்கங்கள் பலதடவை வலியுறுத்தியும், அதை கண்டுகொள்ள நிலையில், தற்போது ஆசிரியை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கூறிய ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர், கொரோனா பணி ஆசிரியருக்கும் வழங்க வேண்டாம் என்று பல முறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால், தங்களது குறைகளே அவர்கள் செவிமடுக்க மறுத்து விட்டனர். உயிர்க்கொல்லி நோயான கொரோனா பணியில், முறையான பயிற்சி வழங்காமலும், பணியின் தன்மை பற்றி விளக்காமலும் , மண்டல அதிகாரிகளின் அலைக்கழிப்பாலும் ஆசிரியர்கள் அதிக மன உளச்சலில் உள்ளனர். எனவே ஆசிரியர்களுக்கு இந்த பணியை வழங்க வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஆசிரியரின் பாதிப்புக்கு பொறுப்பேற்பது யார்? சென்னை மாநகராட்சி ஆணையரா? மாநகராட்சி கல்வி அலுவலரா? மண்டல அலுவலரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா பணிக்கு சென்ற ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. இது சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள் இனிமேலாவது திருந்துவார்களா?…
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்