ஆன்லைன் வகுப்புகள் - மாணவர்கள் உடல், மன நலனைப் பாதுகாப்பது எப்படி?
ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகரிப்பதால் மாணவர்கள் உடல், மன நலனை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியமாகிறது.கொரோனா ஊரடங்கால் வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் அலுவல் ரீதியாகவும் பொழுது போக்கிற்காகவும் கணினி, செல்போன்களை அதிகம் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் கண் பிரச்னைகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியம்.
ஊரடங்கு காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு பணித்துள்ளன. இதேபோல் பள்ளி, கல்லூரிகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் கல்வி கற்பிப்பதை ஊக்குவித்து வருகின்றன. இதுவரை நடைபயிற்சி, பொழுதுபோக்கிற்காக வெளியில் சென்று கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையும் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டது.
இப்படி அனைத்து தரப்பினரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட ஊரடங்கு காலத்தில் அவர்கள் அதிக நேரம் செலவிடுவது கணினி, செல்போன் மற்றும் தொலைக்காட்சியில்தான். இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதுடன், முதுகு பிரச்னைகளும் அதிகரித்துள்ளன.
இப்படி நாள் முழுவதும் கணினி, செல்போனை பயன்படுத்துபவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் நோயின்றி வாழலாம் என்கிறார் கண் மருத்துவர் சவுந்தரி.1. தூரத்தில் இருக்கும் பொருளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 நொடி பார்க்க வேண்டும்.
2. செல்போன், கணினியின் பிரைட்னஸைக் குறைவாக வைக்க வேண்டும்.
3. சிறப்புக் கண்ணாடிகளை அணியலாம்.
4. ட்ரைனஸ் இருப்போர் மருத்துவரை அணுகி சொட்டுமருந்துகள் பெறலாம்.
5. தொடர்ந்து ஏசியில் இருப்பதைத் தவிர்க்குமாறு கூறும் மருத்துவர்கள், சத்தான காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டுமென்றும் அறிவுரை கூறுகின்றனர்.
Post a Comment