Title of the document
IMG_20200612_211613

கூகுள் தேடுபொறியில், பயனாளர்கள் தங்கள் அருகில் இருக்கும் கரோனா ஆய்வகங்களை அறிய உதவும் வகையில் புதிய டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) ஒருங்கிணைந்து, அரசு அறிவித்த கரோனா ஆய்வகங்களின் பட்டியலை பயனாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புதிய டூல் அமைந்துள்ளது.

இந்த புதிய வரவு தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தப் புதிய டூலின்படி, பயனாளர்கள் ‘Testing’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தேடும் போது, பயனாளர்களின் பகுதிக்கு அருகே இருக்கும் பரிசோதனை ஆய்வகங்களின் பட்டியலும், அதன் சேவையை பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் தேடுபொறி முடிவுகளில் வெளியாகும்.அதேப்போல கூகுள் வரைபடத்தில், பயனாளர் ‘covid testing’ அல்லது ‘coronavirus testing’ என்று தேடும்போது, பயனாளர் இருக்கும் இடத்துக்கு அருகே இருக்கும் ஆய்வகங்களின் விவரம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகும்.

தற்போது சுமார் 300 நகரங்களில் இருக்கும் 700 பரிசோதனை ஆய்வகங்களின் பட்டியல் இந்த புதிய டூலில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பல ஆய்வகங்களை இந்தப் பட்டியலில் இணைப்பது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post