Title of the document

வீட்டின் மேற்கூரையில் ஆன்லைன் பாடம் படித்த மாணவி. தனியார் நிறுவனம் செய்த உதவி..!
கேரள மாநிலம் கோட்டக்கலை அடுத்த அரீக்கல் என்னும் பகுதியை சேர்ந்தவர் நமீதா நாராயணன். இந்த பெண் இறுதியாண்டு BA ஆங்கிலம் படித்து வரும் நிலையில் ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து தனது பாடங்களை கற்று வருகிறார். 
 ஆனால், இவர் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்க தேர்வு செய்த இடம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டில் எங்கும் சிக்னல் கிடைக்காத நிலையில் வீட்டின் மேற்கூரையில் சில மணி நேரம் உட்கார்ந்து கற்று வந்துள்ளார்.' இதுபற்றி அவர் கூறியதாவது, 
'எனது வீட்டின் அனைத்து பகுதிகளிலும் உட்கார்ந்து படித்தேன்,. ஆனால் எங்கும் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. அதனால் வீட்டின் மேற்கூரையை தேர்வு செய்தேன்' என அவர் தெரிவித்தார். இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, தனியார் இன்டர்நெட் சேவை நிறுவனம் ஒன்று நமிதாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வீட்டிற்குள்ளேயே கிடைக்கும் படி உதவி செய்து கொடுத்தது. 
இதனையடுத்து, அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் இதே போல பல மாணவ, மாணவிகள் இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் நமீதா தெரிவித்தார். பல தடைகளை தாண்டி கல்வி கற்க எண்ணிய அந்த மாணவிக்கு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொள்ள தனது முன்பிருந்த தடைகள் அனைத்தையும் தாண்டி கல்வி கற்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்ட கல்லூரி மாணவிக்கு பொது மக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post