Title of the document
திருவாரூர் மத்தியப் பல்கலை. தேர்வுகள் இரத்து..!!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடுமையான அளவு கொரோனா அதிகரித்ததால் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் வீரியமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பல மாவட்டங்கள் மீண்டும் கொரோனா பாதிப்பை கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் எதிரொலி காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் இரத்து செய்து அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் எப்படி என்பது குறித்த கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முந்தைய பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post