Title of the document

  பள்ளி திறப்பு, பாடம் குறைப்பு குறித்து ஜூலையில் முடிவு


சென்னை: பாடங்கள் குறைப்பு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து, ஜூலையில் முடிவு எடுக்கப்படும், என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், 2019 - 20ம் கல்வி ஆண்டில், புதிய புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. &'ஜே.இ.இ., நீட்&' போன்ற போட்டி தேர்வு களில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறும் வகையில், புதிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனா பரவலால், பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தான் பள்ளி கள் திறக்கப்படும் என்ற சூழல் நிலவுகிறது.இதனால், பள்ளி நாட்கள் ௨௧௦ ஆக இருப்பது, இந்தாண்டு குறையும் என்பதால், பாடங்களை குறைப்பது, பருவ தேர்வுகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்காக, பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் தலைமையில், ஆய்வு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் கட்ட அறிக்கை, ஏற்கனவே அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட அறிக்கை, விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்நிலையில், பாடத் திட்டம் குறைப்பு, பள்ளிகள் திறப்பு மற்றும் பருவ தேர்வுகள் ரத்து குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், நேற்று முதல்வரை சந்தித்து பேசினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத் திட்டம் குறைப்பு குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களை குறைப்பது தொடர்பாக, ஆய்வுக் குழு, பரிந்துரைகளை அளித்துள்ளது. இதுகுறித்து, ஜூலை முதல் வாரத்தில், உரிய முடிவு எடுக்கப்படும். பள்ளிகளில் தனி மனித இடைவெளியை கடைபிடித்தல், பள்ளிகளில் தினசரி வகுப்புகளை நடத்தும் முறை போன்றவை குறித்தும், ஆய்வுக்குழுவின் பரிந்துரைக்குப் பின், முடிவுகள் எடுக்கப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது குறித்த பணி, தேர்வு துறையில் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post