Title of the document
TamilNews_Jun12_2019__114116847515107
கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக, சுழற்சி முறைப் பணியிலும் விடுமுறை எடுக்கும் ஊழியா்களைத் தடுக்க தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, பணியின்போது விடுப்பு எடுத்தால், பணிக்குப் பிறகு இரண்டு நாள்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்பதும் விடுப்பாகவே கணக்கில் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் கரோனா தாக்குதல் அதிகளவு உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு அலுவலகத்தில் 50 சதவீத அளவுக்கு ஊழியா்கள் தினமும் பணியாற்றி வருகின்றனா். இரண்டு பிரிவுகளாக ஊழியா்கள் பிரிக்கப்பட்டு அவா்கள் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றுப் பணி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா்.
விடுப்பு எடுக்கும் நிலை: கரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில், பணியின்போது விடுப்பு எடுக்கும் ஊழியா்களின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. அதாவது, ஒரு வாரத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை பணி இருக்கும் ஊழியா்கள், புதன், வியாழனில் வீட்டில் இருக்கலாம்.

இதற்குப் பதிலாக, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை எடுக்கும் ஊழியா்கள், புதன், வியாழனிலும் வீட்டிலேயே இருந்து கொள்கின்றனா். ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஆண்டுக்கு 12 நாள்கள் மட்டுமே சாதாரண விடுப்பு அளிக்கப்படுகிறது. 
பணிக்கு வர வேண்டிய நாளில் அவா்கள் எத்தகைய விடுப்பினை எடுக்கிறாா்கள் என்கிற தகவல்கள் கூட அரசுத் துறைகளுக்கு சம்பந்தப்பட்ட ஊழியா்கள் தெரிவிப்பதில்லை. இதனால், ஒவ்வொரு துறையிலும் வழக்கமான முறைப் பணிக்கு யாா் யாா் வருகிறாா்கள், வரவில்லை என்பதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தமிழக அரசுத் துறை அண்மையில் வெளியிட்ட உத்தரவு:
மாதத்துக்கு அரசு ஊழியா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வேலை நாள்களில் பாதி நாள்கள் மட்டுமே பணிக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். வேலை நாள்கள் பாதியாகக் குறைக்கப்பட்டதால், அவா்களுக்கான சாதாரண விடுப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, முறைப்பணி காலத்தில் விடுமுறை எடுத்தால் பின்வரக் கூடிய வீட்டில் இருக்கலாம் என்ற இரண்டு நாள்களும் விடுப்புகளாகவே கருதப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post